"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Sunday, December 2, 2012

துக்கடா சாரும்.... டென்ஷன் அலமேலுவும்...



என்ன பிரச்சனை என்றாலும் சட்டுனு டென்ஷனாகிடாதீங்கப்பா…
டென்ஷன் ஆகாம பிரச்சனை என்னன்னு கண்டுப்பிடிச்சு அதை தீர்க்க என்ன தீர்வுன்னு பொறுமையா யோசிச்சு அதன்படி செயல்பட்டால் டென்ஷனும் காயப்…. பிரச்சனையும் காயப்… போயே போயிந்தி…
உங்களுக்கெல்லாம் ஒரு டென்ஷன் பார்ட்டியை நான் அறிமுகப்படுத்தப்போறேன்… சரியான அதிர்ச்சிக்கு பிறந்தவங்க.. பெயர் அலமேலு… இந்தம்மாவோட டென்ஷன் எவ்ளோ தூரத்துக்கு போய்ருச்சுன்னு பார்ப்போமா??

வீட்டில் நல்லா சிரிச்சு சந்தோஷமா வேலைகள் செய்துக்கொண்டு கணவர், பிள்ளைகளிடம் சந்தோஷமாய் இருந்துக்கொண்டு அம்மாவுக்கு பணிவிடை செய்துக்கொண்டு நாட்கள் நன்றாக தான் போய்க்கொண்டு இருந்தது துக்கடா சார் மேனேஜரா அவள் ஆபிசில் வரும்வரை…. அன்று முதல் டென்ஷன் தொடங்கியது அலமேலுக்கு…

என்ன சொன்னாலும் பரபரவென்று இழுத்துப்போட்டுக்கொண்டு வேலை செய்வது… பயந்து பயந்து டென்ஷனை ஏற்றிக்கொள்வது இப்படி… ஒரு சின்னத்தவறு வேலையில் செய்துவிட்டாலும் துக்கடா சார் அலமேலுவைப்பார்த்து சொல்வது என்னத்தெரியுமா? “ என்ன மேடம் வீட்டில் ஆத்துக்காரரோட பிரச்சனையா? வீட்டு டென்ஷன் வீட்டோட வெச்சுக்கோங்க… ஆபிசுல வந்தா வேலையில் மட்டும் தான் கவனம் இருக்கணும் “ உறுமிட்டு போவான்… பின்னாடியே இவளோட முணுமுணுப்பு ஆரம்பமாகிடும் “ கட்டைல போறவனே கழிஷட என் டென்ஷனே நீ தாண்டா எருமையே “ மனசுக்குள்ள நல்லா திட்டி திட்டி…
என்னிக்கு திடிர்னு நேர்ல துக்கடா சாரைப்பார்த்தா திட்டிரப்போறாளோ அலமேலு...

அவளோட வேலைகளை ஒழுங்கா நிதானமா நிம்மதியா செய்யவிடாம ஏஜெண்ட் க்ளையண்ட் போதாதகுறைக்கு துக்கடா சார் வேலைகள் எல்லாமே இவ தலைல… ஏண்டா இப்படி எருமைன்னு கேட்டாக்க “ வேலையே செய்யாம சம்பளம் வாங்கினா ஜீரணம் எப்படி ஆகும்னு ”டயலாக் விடறான்….

அவளோட வேலைகளோட இந்த வேலைகளும் சேர அவளுடையே டென்ஷனும் பிபியும் அவளுக்கே தெரியாம கூடிக்கொண்டே இருந்தது…

ஒரு நாள் ரோட்டில் நடந்துவரும்போது யாரோட கைங்கர்யமோ ஷர்ட் பேண்ட் போட்டு மாட்டவேண்டிய ஹாங்கரை நல்லா கண்ணுக்கே தெரியாம வளைச்சுப்போட்டு யாராச்சும் விழுந்து கோயிந்தா போட்டுக்கிட்டே அங்கப்ரதட்சணம் பண்ண வராங்களோன்னு அங்க ரோட்டோரத்தில் வாலுகள் பார்த்துக்கொண்டிருக்க…. அலமேலுவைத்தவிர மீதி எல்லாரும் கவனமா அந்த ஹாங்கரை தவிர்த்து ஓரமா நடக்க ஆரம்பித்தனர்… ச்சே என்னாடா போணியே ஆகல அப்டின்னு அலுத்துக்கொள்ளும்போது டமால்னு ஒரு சத்தம்…

சாக்‌ஷாத் நம்ம அலமேலுவே தான்… என்னிக்குமே தரைப்பார்த்து நடக்கிற அலமேலு அன்னிக்குன்னு பார்த்து மொபைல் அடிக்கவே எடுத்து காதுல பொருத்திக்கிட்டு ஹல்லோஓஓஓஓஓவ் அடுத்து அங்க ஹல்லோ சொல்றதுக்கும் இங்க அலமேலு தொபுகடீர்னு விழுந்து வாரவும் சரியா இருந்தது…. அவ போட்டிருந்த கூலிங்கிளாஸ் முகம் சுளுக்கிக்கொள்ள…. கையில் இருந்த மொபைல் அக்குவேறா ஆணிவேறா அம்போன்னு பரிதாபமா விழுந்து கிடக்க.. நம்ம அலமேலு திருப்பிப்போட்ட கரப்பாம்பூச்சி கணக்கா விழுந்துக்கிடக்க… அவ ட்ரெஸ் எல்லாம் கிழிந்து தாறுமாறா…

அவளோட ராசி என்னன்னா என்ன உடம்பு சரியில்லாம போறதுன்னாலும் கரெக்டா வாரக்கடைசில தான்….இப்படி விழுந்து வாரினதும் வாரக்கடைசி… அதனால மெடிக்கல் லீவ் எடுக்கிறது என்பது அலமேலுவால் முடியாமயே போய்ருச்சு….

ஒரு நாள் என்னடான்னா ஓயாத முதுகுவலி…. துக்கடா சார் கிட்டப்போய் அலமேலு பவ்யமா எனக்கு லீவ் வேணும்னு கேட்டப்ப… துக்கடா சார் துச்சமா அலமேலுவைப்பார்த்துட்டு சாரி நிறைய்ய வேலை இருக்கு.. லீவ் எல்லாம் தரமுடியாதுன்னு நிர்தாட்சண்யமா சொல்லிட்டார்… அவ்ளோ தான் அலமேலு என்னென்ன திட்டினா பாவம் எத்தனை மிருகத்தோட பெயர் எல்லாம் நினைவுப்படுத்தினாளோ துக்கடா சாரைத்திட்ட… டென்ஷன் பாட்டுக்கு பிபியை ஏத்திக்கிட்டே போச்சு ரயில்வே பட்ஜெட் போல….

நாலு நாளா துக்கடா சார் டார்ச்சர் ஒரு பக்கம்…. வேலைகள் பளு ஒரு பக்கம்… எல்லாம் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமா நெஞ்சுவலிக்க ஆரம்பிச்சு திடிர்னு ஒரு நாள் மொத்தமா நெஞ்சுவலியில தலைச்சுத்திச்சு அலமேலுக்கு…. (அட இன்னாப்பா நெஞ்சுவலின்னா தலைச்சுத்துமா? அப்டின்னு ரொம்ப வியாக்யானம் எல்லாம் கேக்கப்படாது) நெஞ்சுவலி மன அழுத்தத்துனால (துக்கடா சார் தர டார்ச்சர் தான்) தலைச்சுற்றல் (கங்க்ராஜுலேஷன்ஸ் அப்டின்னு சொல்லிரக்கூடாது அலமேலு தொண்டுக்கிழம்) பிபி அதிகமானதால தலைச்சுற்றல்….

இழுத்துட்டு ஆஸ்பிட்டல் போயிடலாம்னு ஒருவழியா முடிவெடுத்து அலமேலு ஆத்துக்காரர் லீவ் போட்டுட்டு வான்னு சொல்ல…. அலமேலு  துக்கடா சாருக்கு பயந்துக்கிட்டு “ இருங்க இன்னும் கொஞ்ச வேலைகள் இருக்கு முடிச்சிட்டு வரேன்னு “ சொல்லிட்டு வேலைகளைத் தொடர…

அலமேலுக்கு மயக்கம் வர ஆரம்பிச்சிருச்சு பிபி கன்னாபின்னான்னு எகிற ஆரம்பிச்சிருச்சு… அலமேலுக்கு மரணபீதி மனசுல… அச்சச்சோ இன்னைக்கு தான் எனக்கு லாஸ்ட் டேவா அப்டின்னு யோசிக்க….ஆஸ்பிட்டல்ல ஒருவழியா அவங்க ஆத்துக்காரர் கொண்டுப்போய் சேர்க்க… அங்க ஆபிசுல எல்லார் முன்னாடியும் இதெல்லாமே சினிமாக்காட்சி போல நடக்க அங்கிருந்த ஏஜெண்ட் க்ளையண்ட் எல்லாரும் நம்ம துக்கடா சாரை சகட்டுமேனிக்கு வார்த்தைகளால் தாக்க ஆரம்பிச்சிட்டாங்க… நம்ம துக்கடா சாரோ திருட்டுவடையை வாய்ல வெச்ச காக்கா நரிக்கிட்ட மாட்டிக்கிட்டு திருதிருன்னு முழிக்கிற மாதிரி முழிக்க….

அங்க அலமேலுவை டாக்டர் பரிசோதித்துவிட்டு கேட்டார் முதல் கேள்வி… என்னம்மா ப்ரெக்னெண்டா?? ச்சீ போங்க டாக்டர் சஷ்டியப்தப்பூர்த்தி பண்ற வயசுல ப்ரெக்னெண்டா….

வலியில் துடிச்சுக்கிட்டு இருந்தாலும் நக்கலப்பாரு அப்டின்னு தலைல அடிச்சுக்கிட்டு அப்ப என்ன தான் டிப்ரெஷன் உங்க மண்டைக்குள்ள அப்டின்னு டாக்டர் உசுப்பேற்ற…. “ துக்கடா சார் தான் என் ஒரே டிப்ரெஷன்னு” சொல்லி மூக்கு சிந்த ஆரம்பிச்சிட்டா அலமேலு…

சரி சரி… ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கிறோம். இனிமே டிப்ரெஷனை வெளியே தூக்கிப்போடு….

முடியலன்னா??? அப்பாவியா அலமேலு கேட்க….

முடியலன்னா துக்கடா சாரை தூக்கி வெளியே போடு ஆத்தா அப்டின்னு சொல்லிட்டு டாக்டர் ஜகா வாங்கிட்டார்….

இங்க துக்கடா சாருக்கு டென்சனும் பிபியும் எகிற ஆரம்பிக்க பயத்துல ஆஸ்பிட்டல் நோக்கி படையெடுத்துட்டார்….

“ இப்ப எப்படி இருக்கு அலமேலு மேடத்துக்கு “ அப்டின்னு பரிதாபமா முகத்தை வெச்சுக்கிட்டு அலமேலு ஆத்துக்காரர் கிட்ட கேட்க…..

அலமேலு ஆத்துக்காரர் அவர் பங்குக்கு பொரிஞ்சு அப்பளமா தள்ள….. துக்கடா சாருக்கு நாக்கு வெளித்தள்ள ஆரம்பிச்சிருச்சு…

துக்கடா சார் அலமேலு கிட்ட ஓடிப்போய் “ மேடம் மேடம் இனிமே டென்ஷன் மொத்தம் லீசுல வேணாம் நானே குத்தகை எடுத்துக்கிறேன்… நீங்க நிம்மதியா இருங்க மேடம். வேணும்னா ஒரு வாரம் முழுக்க லீவ் எடுத்துக்கோங்க மேடம் அப்டின்னு சொல்லி கூழக்கும்பிடு போட….

சரி சரி நாளை வரும்போது ஆரஞ்ச் ஆப்பிள் ஹார்லிக்ஸ் இதெல்லாம் வாங்கிட்டு வாங்க சார் பேஷ்ண்ட்டை வெறும் கையோட பார்க்க வரக்கூடாதுன்னு தெரியாது??? அப்டின்னு ஸ்டைலா அலமேலு கேட்க….

“ நேரம்டி “ அப்டின்னு ஒரு முறை முறைச்சுட்டு நம்ம துக்கடா சார் தலைல அடிச்சுக்கிட்டு அங்கிருந்து காயப் ஆகிட்டார்….

இந்த கதைல இருந்து என்ன தெரியுது??

டென்ஷன் பில்குல் லேனேக்கா நஹி..தேனேக்கா சப்கோ…

டென்ஷன் நாம எடுத்துக்க கூடாது… என்ன தான் பிரச்சனை என்றாலும் டென்ஷன் ஆறதுனால எதுனா தீர்வு கிடைக்குதா என்ன?? மாறா உடம்பு தான் கெடுது…. அதனால தயவு செய்து மக்களே டென்ஷ்ன் எடுத்துக்காதீங்க… முடிஞ்சா துக்கடா சாருக்கு டென்ஷனை ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடுங்க…..


Related Posts Plugin for WordPress, Blogger...