"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Sunday, October 7, 2012

வலைச்சரம் - நட்பு - நிறைவான ஏழாம் நாள்

வலைச்சரம் - நட்பு - நிறைவான ஏழாம் நாள்


SUNDAY, OCTOBER 7, 2012


நட்பு - கதம்ப உணர்வுகள் ( ஏழாம் நாள் )


உலகில் பிறந்த ஜீவராசிகளில் இருந்து மனிதர் வரை அன்பு என்ற இழை பிணைத்திருப்பதால் தான் ஒருவரிடம் ஒருவர் நட்புடன் பழகமுடிகிறது. மனதில் இருக்கும் அன்பு வெளிப்படுகிறது…. நட்பாய் தொடங்குகிறது…. நிலைத்தும் நிற்கிறது… ஆரோக்கிய நட்பு….. நேர்மையான நட்பு…. உண்மையான நட்பு….. இதெல்லாம் சொல்வது ஒரே ஒரு அர்த்தத்தை மட்டுமே… அன்பு…..

நட்புக்கு வயதில்லை…. ஆண் பெண் பேதமில்லை… அழகு, அறிவு, கல்விக்குரிய தகுதி எதுவும் அவசியமில்லை…..அன்பு இருந்தால் மட்டும் தான் நட்போ உறவோ நிலைத்திருப்பது. அன்பில் விரிசல் ஏற்படும்போது தான் அங்கே நட்பிலும் உறவிலும் தூரம் அதிகமாவது. அந்த விரிசல் கூட இப்படிப்பட்ட காரணத்தால் கூட இருக்கலாம் என்பது என் கணிப்பு...

எதிர்ப்பார்ப்புகள்பொசசிவ்நெஸ்அந்த பொசசிவ்நெஸ்ஸால் ஏற்படும் சந்தேகம்கோபம்,சண்டைவருத்தம்கண்ணீர்பிரிவு...... நட்பாய் இருப்போர் மனதில் அன்பு மிகுதியாய் இருக்கும் வரை அவர்களின் குறைகள் கூட கண்ணுக்கு தெரியாது. அன்பு குறையும்போது சின்ன சின்ன விஷயங்கள் கூட குற்றமாய், குறையாய் தெரியும். அதுவே பூதாகரமாகி விரிசல் விட்டு பிரிவுக்கு வழி வகுக்கும்...

எதிர்ப்பார்ப்புகளோடு நட்பைத்தொடங்கினால் எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றத்திற்கு வழி காட்டும்.. எதிர்ப்பார்ப்புகளற்ற பொச்சிவ்நெஸ் இல்லாத நட்பும் சரி, உறவும் சரி என்றும் அன்பு நிறைந்து நிலைத்து இருக்கும்..

அதனால் தான் சொல்கிறேன் நட்பாய் இருக்க முக்கியமான ஒன்று வேண்டும்… அதுநம்பிக்கை மனதில்... நேர்மை கண்களில்….

நம்பிக்கையுடன் கைக்கோர்த்தால் நட்பும் நலமே…

ஏழு நாட்களும் என் மனம் கவர் பதிவர்களை அறிமுகப்படுத்த வாய்ப்பளிக்க பரிந்துரைத்த வை.கோ அன்பு அண்ணாவுக்கும், பரிந்துரைத்த மஞ்சுவை நம்பிக்கையுடன் ஆசிரியராய் நியமித்த அன்பு சீனா அண்ணாவுக்கும், ஒவ்வொரு நாளும் மனம் கவர் பதிவர்களை அறிமுகப்படுத்தும்போது தயங்காமல் சலிக்காமல் அறிமுகமானவர்களின் வலைப்பூவுக்கு சென்று அவர்களுக்கு அன்புடன் தெரிவித்த அன்பு நண்பர் தனபாலனுக்கும், இதுநாள் வரை என்னுடனே ஊக்கம் தரும் பின்னூட்டங்கள் அளித்து என்னுடனே பயணித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த மனம் நிறைந்த பணிவான அன்பு நன்றிகள்.

இன்று என் மனம்கவர் பதிவர்கள் சிலரின் வலைப்பூக்களை பார்ப்போமாப்பா?



எந்த ஒரு தகவலையும் பதியும்போதும் சரி, எந்த ஒரு சுவாரஸ்யமான விஷயங்களை பதியும்போதும் சரி அதை தவறு இல்லாமல் மிக கனகச்சிதமாக பகிர்ந்து தமிழை நேசித்து, சுவாசித்து அதையே யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம் என்பது போல் வாசகர் அனைவருக்கும் அன்புடன் பகிரும் மிக அற்புதமான மனிதநேய உள்ளம் கொண்ட தி. தமிழ் இளங்கோ ஐயாவின் பதிவுகள் சில பார்ப்போமா?




இந்த கண்ணனின் படத்தை உற்றுப்பார்த்தபோது பதிவர் மாநாட்டில் எடுத்த வல்லிம்மா படத்தில் இருக்கும் வல்லிம்மாவின் புன்னகைக்கும் இந்த உள்ளம் கவர் கள்வன் கண்ணனின் புன்னகையும் ஒரே போல் தோன்றியது எனக்கு. அத்தனை அன்பும் பரிவும் வாத்ஸல்யமும் வல்லிம்மாவின் பதிவுகளில் நான் கண்டேன். எப்போதோ ஒரு முறை எங்கள் பிளாக் என்ற வலைப்பூவில் மிக அருமையாக வல்லிம்மா பாடுவதைக்கேட்டு லயித்துப்போனேன் அவரின் இனியக்குரலில். இந்த அன்பு உள்ளத்தின் பதிவுகள் சில பார்ப்போமா?




புராணக்கதைகள் கேட்கணும்னா எனக்கு ரொம்பப்பிடிக்கும். அதிலும் கண்ணன் இடம்பெறும் அத்தனை காட்சிகளும் எத்தனை படித்தாலும் திகட்டாது. தித்திக்க தித்திக்க கண்ணன் கதைகளைச்சொன்னால் அதில் வரும் ஒவ்வொருவரையும் கதையில் காட்சிகளாக விவரிக்கும்போது நம் கண்முன் அந்த காட்சி விரிகிறது. பீஷ்மரைப்பற்றி சொல்லும்போது பீஷ்மரின் தீட்சண்யப்பார்வை, கண்ணனின் குளுமையான அழகுப்புன்னகை...அத்தனையும் இவரின் பதிவுகளில் தவறாமல் காணலாம். ரசிக்கும்படி தலைப்புகளும் அத்தனை அசத்தல். பார்ப்போமா அழகு கண்ணனின் கதைகள் கொண்ட பகிர்வுகள் சில?

சத்யவதியின் மனோதிடம் 




இவங்க முகத்தைப்பார்த்தால் என்ன ஒரு துறு துறுன்னு ஆக்டிவா இருக்காங்க.... இதே சுறுசுறுப்பும் துறுதுறுப்பும் இவர்களின் பதிவுகளிலும் காணமுடிகிறது. நான் மிகவும் ரசித்து வாசித்தேன் நோகாமல் வடை சுடுவது எப்படின்னு....  நான் நேற்று மாலை வடை சுடும்போது (ஆஞ்சந்எந்த ஒரு பதிவும் பதிவும்போதே அதை வாசகர்கள் விருப்பத்திற்கிணங்க சுவாரஸ்யமா தருவது இவர்களின் அழகான பாங்கு. ஆசிரியை அல்லவா... அதான் அத்தனை பர்ஃபெக்‌ஷன். 2004 ஆம் ஆண்டில் இருந்து வலைப்பூவில் அட்டகாசமாக தொடரும் இவர் பயணம் இனியும் வெற்றியுடன் தொடரவும்... சமீபத்தில் நடந்த சஷ்டியப்த பூர்த்தி விழாவுக்காகவும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் மேடம்..  துளசி டீச்சரின் பதிவுகள் சில பார்ப்போமா?




இவங்க வலைப்பூவில் போய் பார்த்தால் அப்பப்பா ஒரே கதம்ப மணம் தான். குழம்பு மணக்கிறது, பொரித்த குழம்பும், வயதானவர்களுக்காக இலகுவான கஞ்சியும் இன்னும் என்னென்னவோ சமையலில் அசத்தி இருக்காங்க. நிதானமா நீங்க இவர் வலைப்பூவில் போய் பார்த்தீங்கன்னா கண்டிப்பா தினம் தினம் வெரைட்டியா சமைத்து அசத்தலாம் வீட்டிலும் பிள்ளைகளுக்கு வெரைட்டியா டிபன் கிடைக்கும். நல்லப்பெயரும் கிடைக்கும். அட அப்டின்னு அசந்து போறமாதிரி சமைக்கலாம் இவர் வலைப்பூவில் இருந்து சிலவற்றை பார்ப்போமா?

கரணைக்கிழங்கு பொரித்த குழம்பு 




நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடிவா.... ஹுஹும் நிலா நம்மக்கிட்ட வராது... நாம தான் நிலாமகள் வலைப்பூவுக்கு சென்று பார்க்கவேண்டும்.. அப்படி போய் பார்த்தால் அழகிய அவரின் கவிதை பிரவாகங்களும், அருமையான மருத்துவ பயன்களும், பயன் தரும் அனுபவங்களும் மிக எளிய நடையில் பகிர்ந்திருக்காங்க. அன்பு நலன் விசாரித்தலும் உண்டு . பார்ப்போமா நிலாமகளின் சில நட்சத்திர பதிவுகள் ?





தாய்மை நிறைந்த இந்த படத்தை உற்றுப்பார்க்கும்போது இவரின் அன்பு மனதையும் அறியமுடிகிறது இவர் பதிவுகளில்.... குழந்தைகளில் பலவகை இருப்பார்கள். என் பொம்மை என்னுடையது எனக்கு மட்டும் தான்... இந்தா அழாதே என் பொம்மை நீ வெச்சுக்கோ என்று கொடுக்கும்... இன்னொரு குழந்தையோ வா நாம் இருவருமே ஒன்றாய் இந்த பொம்மையை வைத்து விளையாடுவோம் சண்டையே இடாமல்... மூன்று குழந்தைகளின் எண்ண ஓட்டத்தை பாருங்கள்.... குழந்தைகள் தான். ஆனால் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கண்ணோட்டம் இருக்கிறது. எந்தக்குழந்தையும் நல்லக்குழந்தை தான்... நாம் குழந்தையை நல்லவைகளை சொல்லித்தந்து வளர்ப்பதில் தான் சூட்சுமம் அடங்கி இருப்பது. ஏன் இதெல்லாம் வள வளன்னு சொல்றீங்க அப்டின்னு என்னை கேக்காதீங்கப்பா.. இந்த அன்பு உள்ளத்தின் பதிவுகளை போய் பார்த்தால் தாய்மை நிறைந்த அன்பு பதிவுகள் நிறைய இது போல் பயனுள்ளவை இருக்கிறது.. பார்ப்போமா அவற்றில் சில?





கதை எழுதுவது, கவிதைகள் புனைவது, படம் வரைவது, சிற்பங்கள் வடிப்பது இதெல்லாம் எப்படி ஒரு கலையோ அதுபோல் சமையலும் ஒரு கலை. சமைக்கும்போது நாம் என்ன மனநிலையில் சமைக்கிறோமோ அதே போல் பண்டமும் அமையுமாம்.  நல்ல மனநிலையில் சந்தோஷமான மனநிலையில் இசையைக்கேட்டுக்கொண்டோ அல்லது பாட்டு ஹம் செய்துக்கிட்டோ (பிடிச்சப்பாட்டு அல்லது ஸ்லோகங்கள்) சமைச்சுட்டு அதன்பின் ஈடுபாட்டோடு அதை பரிமாறி சுவைப்பவர் அதன்பின் சொல்லும் வார்த்தை ஆஹா இதுவல்லவா சமையல்... இப்டி எல்லாம் நான் சொல்லவே இல்லப்பா.. ராதாராணிம்மா கிச்சனுக்கு போய் பார்த்தால் இப்படி எல்லாம் தான் நினைச்சு செய்திருப்பாங்களோன்னு நினைக்கவைத்த அளவுக்கு தத்ரூபமா அழகான படங்களோட விதம் விதமா சமைச்சு அசத்தி இருக்காங்க. நாமெல்லாம் மாவுல இட்லி சுடுவோம் தோசை சுடுவோம். இவங்க பாருங்க சட்னி எல்லாம் செய்து அசத்தி இருக்காங்க...இவரின் அசத்தலான சில பதிவுகள் பார்ப்போமா?







துரை டேனியல்.. அதிகம் எனக்கு பரிச்சயமே இல்லாத பதிவர்.. ஆனால் வலைச்சர ஆசிரியராய் நான் பணி தொடங்கிய நாளில் இருந்து தொடர்ந்து வந்து அருமையான பின்னூட்டங்கள் அளித்து ஊக்கம் தருபவர். சரி போய் தான் பார்ப்போமே இவர் வலைக்கு அப்டின்னு போய் பார்த்தால்... அட நிஜம்மாவே இவர் குடத்திலிட்ட விளக்கு தாம்பா.. அத்தனை திறமைகளையும் தன்னுள் வைத்துக்கொண்டு எத்தனை அடக்கமாக அமைதியாக வந்து பதிவுகளும் பதிவுகளுக்கு பாராட்டும் ஊக்கமும் தரும் பின்னூட்டங்களும் அளிக்கிறார்... அருமையான தலைப்புகள் தந்து பயனுள்ள விஷயங்களை பகிர்ந்து, அழகிய கவிதைகளை நம்முள் சிந்தனைகளை தூண்டிவிடும் இவரின் சில பதிவுகளை பார்ப்போமா?

என் பறை முழங்குகிறது 


இன்றைய நாள் மட்டுமல்லாது இனிவரும் எல்லா நாட்களும் எல்லோருக்கும் நல்ல நாளாக, வெற்றியைத்தரும் நாளாக நல்லவைகளைத்தரும் நாளாக சந்தோஷங்களைத்தரும் நாளாக (நாட்களாக) அமைய இறைவனை வேண்டிக்கொண்டு என் பணியை முடிக்கிறேன்பா..

அடுத்து ஆசிரியர் பணி தொடரும் அன்பு உள்ளத்திற்கு என் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்....

இன்றோடு என் பணி இங்கே முடிந்தது.... சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் முடிவே இல்லாதது.... 


1 comment:

  1. அக்கா!.. தாங்கள் வலைச்சர பொறுப்பேற்ற நாட்களில் நான் அதிகம் இணையப்பக்கம் வரவில்லை! எனினும் அந்த பதிவுகளை இப்போது வாசித்தேன். அருமையான தொகுப்பு அக்கா!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...